×

அதிக கட்டணம் வசூலிப்பதற்கு ‘செக்’ பேனிக் பட்டனுடன் கூடிய மீட்டர் ஆட்டோக்களில் பொருத்த முடிவு: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பேனிக் பட்டனுடன் கூடிய மீட்டர்களை, விரைவில் பொருத்துவதற்கான பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு தீர்வு காணப்படும், எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களை ஓட்டும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது எப்போதாவது கணக்கிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மட்டும் கிடுக்கிப்பிடி காட்டப்பட்டு வருகிறது.

இதனால் அவர்கள் போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்துடன், கட்டணம் அதிக அளவில் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்திலும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடத்திலும் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக இதை கட்டுப்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டது. கிலோ மீட்டருக்கு இவ்வளவு கட்டணம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு இப்பணியில், அதிகாரிகள் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. இதுகுறித்த குற்றச்சாட்டு மீண்டும் எழுந்தது.

இதையடுத்து ஆட்டோக்களில் பேனிக் பட்டனுடன் கூடிய மீட்டர்களை ெபாருத்த, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த கருவியானது காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். ஆட்டோவில் பயணிக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே பயணி பேனிக் பட்டனை அழுத்தலாம். அப்போது ஆபத்து குறித்த தகவல் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை சென்றடையும். மேலும் ஆட்ேடாவில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டு இருப்பதால், ஆட்டோ செல்லும் பாதைகளை கண்டறிவது போலீசாருக்கு  எளிதாகிவிடும். ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த மீட்டரை ஆன் செய்யாமல் ஆட்டோவை  இயக்க முடியாது.

அவ்வாறு அவர்கள் முயன்றால், அதுகுறித்த தகவலும் கட்டுப்பாட்டு மையத்திற்கு  சென்றுவிடும். இதன்மூலம் போலீசார் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும். தற்ேபாது பொருத்தப்படவுள்ள மீட்டரில் பயணத்திற்கான தொகையை அச்சிடும் சிறிய கருவியும் இணைக்கப்பட்டிருக்கும். எனவே குறிப்பிட்ட தொலைவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம், இதில் அச்சிடப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும். தற்ேபாது இந்த கருவியை ெபாருத்துவதற்கான பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது: சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில் விரைவில் பேனிக் பட்டனுடன் கூடிய மீட்டர்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணம் முறையாக பதிவாகிறது. விரைவில் சோதனை முடிந்த பிறகு, ஆட்டோக்களில் பொருத்தப்படும். இப்பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட பிரச்னைகளையும் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டாக்சிகளில் ஜிபிஎஸ் சென்னையில் பொதுமக்களுக்கு ஆட்டோ, கால்டாக்சி சேவைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களில், ஏற்கனவே ஜிபிஎஸ் வசதி பயன்பாட்டில் உள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்துச்செல்லும் வாகனங்களிலும் இக்கருவிகள் பொருத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மட்டும் காலம்தாழ்த்தி வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகினறனர்.

Tags : Meter ,Transport Department , Meter with panic button, Auto
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு